ஜிவி பிரகாஷின் "அடங்காதே" ரிலீஸ் தேதி அறிவிப்பு

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், சுரபி நடித்துள்ள ‘அடங்காதே’ திரைப்படம் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியாகிறது.
ஜிவி பிரகாஷின் "அடங்காதே" ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'அடங்காதே'. இதில் இவருக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா, யோகி பாபு, அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீ கிரீன் புரோடக்சன்ஸ் சார்பில் எம்.எஸ்.சரவணன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை இ5 நிறுவனம் கைப்பற்றி உலகமெங்கும் வெளியிடவுள்ளது

'அடங்காதே' குறித்து பேசிய இயக்குநர் சண்முகம் முத்துசாமி, "இது ஒரு அரசியல் திரில்லர் ஆகும். சமகால அரசியல் குறித்து இப்படம் பரபரப்பாக விவரிக்கிறது. இரு சக்கர வாகனங்களை ரிப்பேர் செய்யும் இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் குமாரும், அரசியல் தலைவராக சரத்குமாரும் மிரட்டியுள்ளனர். கதையில் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சீமான் அவர்களுக்கு மிக்க நன்றி" என்று கூறினார்.

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், சுரபி உள்ளிட்டோர் நடித்துள்ள 'அடங்காதே' திரைப்படம் ஆகஸ்ட் 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com