ஜி.வி.பிரகாஷின் “ஹேப்பி ராஜ்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மரிய இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படம் வரும் 27ம் தேதி வெளியாகிறது.
ஜி.வி.பிரகாஷின் “ஹேப்பி ராஜ்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக் வெளியான படம் 'பிளாக்மெயில்'. மு.மாறன் இயக்கிய இதில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து, ஜிவி பிரகாஷ் ‘ஹேப்பி ராஜ்’ புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கெளரி பிரியாவும் முக்கிய கதாபாத்திரங்களில் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடலாக "ஆடினே இருப்பேன்" வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com