ஜி.வி.பிரகாஷின் “இம்மார்ட்டல்” திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு

மாரியப்பன் சின்னா இயக்கும் ‘இம்மார்ட்டல்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷின் “இம்மார்ட்டல்” திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் ஹாப்பி ராஜ் படம் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து, அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கும் ‘இம்மார்ட்டல்’ படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார்.

டி.எம்.கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

ரொமான்ஸ், திரில்லர், பேன்டஸி கதைக்களத்தில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், “இம்மார்ட்டல்” திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வரும் 22ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com