ஜிவி பிரகாஷின் "கிங்ஸ்டன்" மேக்கிங் வீடியோ வெளியானது

ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இணைந்து நடித்துள்ள 'கிங்ஸ்டன்' படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜிவி பிரகாஷின் "கிங்ஸ்டன்" மேக்கிங் வீடியோ வெளியானது
Published on

சென்னை,

இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் தற்போது நடிகராக அவரது 25வது படமான 'கிங்ஸ்டன்' எனும் படத்தில் நடித்துள்ளார்.அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் நடிகை திவ்யபாரதி ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் முதல் இந்திய கடலில் நடக்கும் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாகும். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிடுள்ளது. திரைப்படத்தை கப்பல் செட் போட்டும், சில காட்சிகளை கடலில் எடுத்துள்ளனர். கிராபிக்ஸ் காட்சிகளை குறைக்க தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர்கள் சிறப்பு மேக்கப்களை போட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com