சினிமாவில் 'ரீ என்ட்ரி'...பூஜையுடன் துவங்கிய அப்பாஸின் புதிய படம்


GVPrakash - GouriPriya film started with a Pooja
x
தினத்தந்தி 5 Aug 2025 9:30 PM IST (Updated: 5 Aug 2025 9:30 PM IST)
t-max-icont-min-icon

ஜி.வி. பிரகாஷ் மற்றும் கவுரி பிரியா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சென்னை,

நடிகர் அப்பாஸ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கி இருக்கிறது.

அறிமுக இயக்குனர் மரியராஜா இளஞ்செழியன் இயக்கும் இந்தப் படத்தின் மூலம் 10 வருடங்களுக்கு பிறகு அப்பாஸ் சினிமாவில் 'ரீ என்ட்ரி' கொடுத்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் மற்றும் கவுரி பிரியா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பியாண்ட் பிக்சர்ஸ் மூலம் ஜெயவர்த்தனன் தயாரிக்கும் இப்படம் முழுமையான பொழுது போக்கு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

1 More update

Next Story