'சூர்யா 46' - இசையமைப்பாளர் அறிவிப்பு


G.V.Prakash Kumar In Suriya46
x

வெங்கி அட்லூரி இயக்கிய ’வாத்தி’, ’லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

சென்னை,

3வது முறையாக வெங்கி அட்லூரி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

நடிகர் சூர்யா தற்போது தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 46' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் வெங்கி அட்லூரியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

இது இவர்கள் இருவரும் இணையும் 3-வது படமாகும். இதற்கு முன்பு, வெங்கி அட்லூரி இயக்கிய 'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' ஆகிய படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story