'செய் செய்யாதே' படத்தில் முதல்-அமைச்சராக நடிக்கும் எச்.ராஜா..!

பல்வேறு சமூக பிரச்சினைகளை இப்படம் அலசுகிறது என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
'செய் செய்யாதே' படத்தில் முதல்-அமைச்சராக நடிக்கும் எச்.ராஜா..!
Published on

தமிழக பாஜக கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா 'கந்தன் மலை' என்ற படத்தில் ஏற்கனவே நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். ஹரிணி சுப்பு சினி கிரியேசன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்து, டாக்டர் எஸ்.ராஜா இயக்கியுள்ள 'செய் செய்யாதே' என்ற படத்தில் எச்.ராஜா முதல்-அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் குரு விஜய், தர்ஷினி ரெட்டி, விஜயலட்சுமி, சிதம்பரம், மவுனிகா, பிரீத்தி, தபிதா உள்பட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் எச்.ராஜா பேசும்போது, “இன்றைய தலைமுறையினரை அச்சுறுத்தும் போதைப்பழக்கம், தவறான மருத்துவ தகவல்கள், குடும்ப உறவுகளில் ஏற்படும் பாதிப்புகள் என பல்வேறு சமூக பிரச்சினைகளை இப்படம் அலசுகிறது. பெற்றோர், ஆசிரியர், மருத்துவர்களுக்கு உள்ள பொறுப்புகளையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது.

இந்த படத்தில் நடித்த அத்தனை பேரும் 'மேக்கப்' போடாமல், இயல்பான தோற்றத்திலேயே, எளிமையான உடைகளிலேயே நடித்துள்ளது சிறப்பான விஷயம். குறிப்பாக இந்த படம் செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களின் கஷ்டங்களை எடுத்துச் சொல்லும். இது போன்ற சமூக கருத்துள்ள திரைப்படங்கள் வெளியாவது சினிமாவுக்கும், சமூகத்துக்கும் மிகப்பெரிய நன்மை தரும்" என்றார். விழாவில் முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அவரது கணவர் டாக்டர் சவுந்தரராஜன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com