ஹபீபி கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம்; மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி பதிவு

மாரி செல்வராஜின் இந்த பாராட்டு பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வரும் நிலையில், 'ஹபீபி' திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.
மாரி செல்வராஜ்
Published on

'அவள் பெயர் தமிழரசி', 'விழித்திரு' உள்ளிட்ட படங்களை இயக்கிய மீரா கதிரவன் இயக்கத்தில் உருவான 'ஹபீபி' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இஸ்லாமிய குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஈஷா எம், மாளவிகா மனோஜ், தனஸ்ரீ, சுதாகரன், அனுஸ்ரீயா ராஜன், இஸ்மத் பானுரேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மாரி செல்வராஜின் பாராட்டு

இந்த நிலையில், பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் 'ஹபீபி' திரைப்படத்தை பாராட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், "அன்புமிக்க அண்ணன் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் 'ஹபீபி' திரைப்படத்தை பார்த்தேன். நம்மோடு, நம் நிலத்திலே, நம் வாழ்வுக்குள்ளாகவே இருந்த தமிழ் இஸ்லாமிய வாழ்வை நேர்த்தியாகவும், நெருக்கமாகவும், ஆழமாகவும் பதிவு செய்த முதல் திரைப்படமாக இது அமைந்துள்ளது.

பெருங்கனவு

தமிழ் சினிமாவின் நீண்டநாள் கனவான அசல் இஸ்லாமிய சினிமா என்ற பெருங்கனவை மீரா கதிரவன் நிறைவேற்றி, காலத்திற்கும் நிலைத்திருக்கும் ஒரு படைப்பை உருவாக்கியுள்ளார். அவருக்கும், அவரது குழுவினருக்கும் என் வாழ்த்துகளும் அன்பும். 'ஹபீபி' கொண்டாடப்பட வேண்டிய படைப்பு" எனத் தெரிவித்துள்ளார்.மாரி செல்வராஜின் இந்த பாராட்டு பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வரும் நிலையில், 'ஹபீபி' திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com