'ஹாய் நான்னா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியான 'ஹாய் நான்னா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
'ஹாய் நான்னா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்திருந்தார். அப்பா, மகள் உறவை மையமாக வைத்து வெளியான இந்த படத்துக்கு ஹசம் அப்துல் இசையமைத்திருந்தார். இந்த படத்தை வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.

கடந்த 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியான 'ஹாய் நான்னா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஹாய் நான்னா' திரைப்படம் ஜனவரி 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com