'ஹாய் நான்னா' - வைரலாகும் நானி பட கிளிம்ப்ஸ் வீடியோ

நானியின் 30-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
'ஹாய் நான்னா' - வைரலாகும் நானி பட கிளிம்ப்ஸ் வீடியோ
Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானி தமிழில் வெப்பம், ஆஹா கல்யாணம், நான் ஈ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இந்த நிலையில் நானியின் 30-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் சவுர்யவ் இயக்குகிறார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாகூர் நடிக்கிறார்.

இந்த படத்துக்கு 'ஹாய் நான்னா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'ஹாய் நான்னா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com