ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள 'மின்மினி' திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு

‘மின்மினி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள 'மின்மினி' திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு
Published on

சென்னை,

'சில்லு கருப்பட்டி', 'ஏலே', மற்றும் 'புத்தம் புது காலை விடியாதா' ஆந்தாலஜி தொகுப்பின் ஒரு பகுதியான 'லோனர்ஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவரது 'மின்மினி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது குழந்தைகளாக இருந்து இளம் பருவத்தினராக மாறும் கதாபாத்திரங்களைக் கொண்ட கதை என்பதால், 2014-ம் ஆண்டு குழந்தைப்பருவத்தில் இருந்த கதாபாத்திரங்களை படமாக்கிவிட்டார்.

இதையடுத்து அந்த கதாபாத்திரங்கள் இளம் பருவத்தை அடையும் வரை அதாவது 7 ஆண்டுகள் காத்திருந்து, அவர்களின் முதிர்ச்சியடைந்த தோற்றத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவரும் வகையில் கடந்த ஆண்டு 'மின்மினி' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.

இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் எஸ்தர் அனில், பிரவின் கிஷோர் மற்றும் கவுரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'மின்மினி' படத்தை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, 'அங்கர் பாய் ஸ்டூடியோஸ்' நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் ஹலிதா ஷமீம், இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். 

Here is the FL poster of #Minmini. Thank you, each one of you who is looking forward to the film. pic.twitter.com/r3lqk3Dc8i

Halitha (@halithashameem) September 12, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com