விவாகரத்துக்குப் பின்... பஞ்சாப் பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ஹன்சிகா

சமீபத்தில் நடிகை ஹன்சிகா தனது கணவரை பிரிந்தார்.
விவாகரத்துக்குப் பின்... பஞ்சாப் பொற்கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ஹன்சிகா
Published on

அமிர்தசரஸ் ,

கடந்த 2011-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் ஹன்சிகா. தொடர்ந்து, ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ , ‘வேலாயுதம்’ படங்கள் ஹன்சிகாவை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது.

சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும்போதே, கடந்த 2022-ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரது திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையில் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்றது. திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார்.

இதற்கிடையில், அவருடைய 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கை அண்மையில் முடிவுக்கு வந்தது. கணவர் - மனைவி இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். நடிகை ஹன்சிகா ஜீவனாம்சம் எதையும் கோரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், பஞ்சாப் பொற்கோவிலில் நடிகை ஹன்சிகா மோத்வானி சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான் புகைப்படங்களை அவர் தனதி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com