ஓ.டி.டி.யில் ஹன்சிகா திருமண வீடியோ

தனது திருமண வீடியோ ஓ.டி.டி.யில் விரைவில் வெளியாக இருப்பதாக ஹன்சிகா சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தற்போது தெரிவித்து உள்ளார்.
ஓ.டி.டி.யில் ஹன்சிகா திருமண வீடியோ
Published on

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட முன்னணி கதாநாயகிகள் பலர் தங்கள் திருமண சடங்கு கொண்டாட்ட வீடியோவை வெளியிடும் உரிமையை ஓ.டி.டி. தளங்களுக்கு பெரிய தொகைக்கு விற்று பணம் பார்த்தனர்.

நடிகை நயன்தாராவும் திருமண வீடியோவை ஓ.டி.டி.க்கு விற்றார். இதுபோல் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹன்சிகாவும் திருமண வீடியோவை ஓ.டி.டி. தளத்துக்கு விற்று இருக்கிறார்.

ஹன்சிகாவின் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் 4-ந்தேதி 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் உள்ள முண்டோடா கோட்டையில் நடந்தது. தொழில் அதிபர் சோகைல் கதுரியாவை மணந்து கொண்டார்.

தனது திருமண வீடியோ ஓ.டி.டி.யில் விரைவில் வெளியாக இருப்பதாக ஹன்சிகா சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தற்போது தெரிவித்து உள்ளார்.

சோகைல் கதுரியாவுடனான காதல், அவரை திருமணம் செய்து கொள்ள எடுத்த முடிவு, சினிமா வாழ்க்கை போன்ற ஹன்சிகாவின் பேட்டியுடன் திருமண வீடியோ வெளியாக இருக்கிறது.

இது ஹன்சிகா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com