பிரபாஸுடனான தனது படம் குறித்து இயக்குனர் ஹனு ராகவபுடி பேச்சு


Hanu Raghavapudi makes a big statement about his film with Prabhas
x

ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் தனது அடுத்து படத்தில் நடித்து வருகிறார்.

ஐதராபாத்,

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா, கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், சுமந்த் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் சீதா ராமம் . இந்த வெற்றிப்பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில்தான் பிரபாஸ் தனது அடுத்து படத்தில் நடித்து வருகிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக இன்ஸ்டா பிரபலம் இமான்வி நடிக்கிறார். இது இவரது அறிமுக படமாகும். இந்நிலையில், பிரபாஸுடனான தனது படம் குறித்து இயக்குனர் ஹனு ராகவபுடி பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

"பிரபாஸுடன் நான் பணியாற்றி வரும் படத்தின் காட்சியைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள். இதுவரை பார்த்திராத சினிமாவை உருவாக்கி வருகிறோம். அது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்' என்றார்.



Next Story