ஐதராபாத்தில் நடந்தது: நடிகை லாவண்யா திருமண நிச்சயதார்த்தம்

ஐதராபாத்தில் நடந்தது: நடிகை லாவண்யா திருமண நிச்சயதார்த்தம்
Published on

சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், லாவண்யா திரிபாதி. இவரும், தெலுங்கு நடிகர் வருண் தேஜூம் காதலித்து வந்தனர். இருவரும் 'மிஸ்டர்', 'அந்தாரிக்சம்' ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். அப்போது காதல் மலர்ந்தது.

வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமணம் விரைவில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. வருண் தேஜின் தந்தையும், நடிகருமான நாகபாபு, "திருமண விஷயத்தை வருண் தேஜே அறிவிப்பார். திருமணம் முடிந்ததும் மணமக்கள் தனி குடித்தனம் சென்றுவிடுவார்கள்", என்று கூறியிருந்தார்.

யாரும் எதிர்பாராத வகையில் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமண நிச்சயதார்த்தம் சத்தமே இல்லாமல் நேற்று நடந்து முடிந்தது. ஐதராபாத்தில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய குடும்பத்தினரும் மட்டுமே பங்கேற்றனர்.

நிச்சயதார்த்தம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே இத்தகவல் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி ஜோடிக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com