ஷாருக்கானின் ''கிங்'' படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்

தற்போது அனைவரின் பார்வையும் ஷாருக்கானின் அடுத்த படமான ''கிங்'' மீது உள்ளது.
சென்னை,
கடந்த 2023-ம் ஆண்டில் ஷாருக்கான், பதான், ஜவான் மற்றும் டன்கி ஆகிய ஹாட்ரிக் பிளாக்பஸ்டர்களை வழங்கி பாலிவுட்டில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தினார்.
இப்போது, அனைவரின் பார்வையும் அவரது அடுத்த படமான ''கிங்'' மீது உள்ளது. இந்நிலையில், ஓடிடி நிகழ்ச்சிகள் மற்றும் ''மகாராஜ்'' போன்ற படங்களுக்கு பெயர் பெற்ற நடிகர் ஜெய்தீப் அஹ்லாவத், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ''கிங்'' படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
சித்தார்த் ஆனந்த் இயக்கிய இந்தப் படம், ஆக்சன் திரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Related Tags :
Next Story






