உழைப்பாளர் தினத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர் அஜித் - ஓ.பன்னீர் செல்வம் பிறந்தநாள் வாழ்த்து

உழைப்பாளர் தினத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர் நடிகர் அஜித்குமார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
உழைப்பாளர் தினத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர் அஜித் - ஓ.பன்னீர் செல்வம் பிறந்தநாள் வாழ்த்து
Published on

சென்னை,

உழைக்கும் மக்களின் உயர்வை போற்றும் வகையில் இன்று நாடு முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே நடிகர் அஜித்குமார் மே 1 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலரும் நடிகர் அஜித்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் அஜித்குமாருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது மற்றொரு பதிவில், தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் போராடி உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உழைப்பின் மேன்மையை உலகிற்கு எடுத்துரைத்த உயர் தினமாகவும் திகழும் மே தினத்தில் உலககெங்கும் வாழும் தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com