50-வது படத்தில் நடிப்பது மகிழ்ச்சி - நடிகர் பரத்

50-வது படத்தில் நடிப்பது மகிழ்ச்சி - நடிகர் பரத்
Published on

பரத் 50-வது படமாக 'லவ்' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் சினிமா அனுபவங்கள் குறித்து பரத் அளித்துள்ள பேட்டியில், "நான் 2003-ல் பாய்ஸ் படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இப்போது 50-வது படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருக்கிறேன்.சினிமாவில் எல்லா படங்களையும், நல்ல படமாக நினைத்து நடித்தாலும் சில படங்கள் எதிர்பார்த்த மாதிரி வரவேற்பை பெறுவது இல்லை. நான் நிறைய வெற்றி படங்கள் கொடுத்தும் இன்னும் சினிமாவில் போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் இருப்பது அதற்கு காரணமாக இருக்கலாம். பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க வாய்ப்புகள் அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். லவ் படத்தை ஆர்.பி.பாலா டைரக்டு செய்துள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். திருமணத்துக்கு பிறகு கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளை இந்த படம் பேசும். வாணிபோஜனுக்கு தமிழ் தெரியும் என்பதாலும், சின்னத்திரையில் இருந்து வந்த அனுபவம் காரணமாகவும் கதையை உள்வாங்கி சிறப்பாக நடித்து இருக்கிறார். படம் விறுவிறுப்பாக இருக்கும்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com