'இந்த படத்தில் ஒரு சிறிய பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சி' - ரெபா மோனிகா ஜான்


Happy to have been a very small part of this film- Reba Monica John
x

'மேட் ஸ்கொயர்' படக்குழுவுக்கு ரெபா மோனிகா ஜான் வாழ்த்து கூறியுள்ளார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ரெபா மோனிகா ஜான். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016-ம் ஆண்டு "ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம்" என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார்.

மேலும், தமிழில் 2018-ம் ஆண்டு ஜெய் நடித்த "ஜருகண்டி" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். பின்னர், விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து, 2019-ம் ஆண்டு கன்னட திரைப்படத்திலும் நடித்து அறிமுகமானார். தெலுங்கில் கல்யாண் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'மேட் ஸ்கொயர்' படத்தில் சுவாதி ரெட்டி என்ற பாடலுக்கு ரெபா நடனமாடி இருக்கிறார். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், 'மேட் ஸ்கொயர்' படக்குழுவுக்கு ரெபா மோனிகா ஜான் வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், 'இது 'மேட் ஸ்கொயர்' நாள். இந்தப் படத்தில் ஒரு சிறிய பகுதியாக இருந்ததில் மகிழ்ச்சி. பிளாக்பஸ்டர் வெற்றிக்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள். திரையரங்குகளில் படத்தைத் தவறவிடாதீர்கள்' என்று தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story