"ஹரிஹர வீரமல்லு" படத்தின் முதல் நாள் வசூல்

பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஹரி ஹர வீரமல்லு’ படம் மக்கள் வரவேற்பை பெற்று வருகிறது.
பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், பவன் கல்யாண், நிதி அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் 'ஹரி ஹர வீரமல்லு'. பான் இந்தியா படமாக வெளியான இப்படம் முதல் நாளில் ரூ44 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பவன் கல்யாண் நடித்து வெளிவந்த படங்களில் முதல் நாளில் அதிக வசூலைப் பெற்ற ஒரு படமாகவும் இது இருக்கிறது.
இப்படத்தின் மொத்த தியேட்டர் வியாபாரம் ரூ.120 கோடி வரை நடந்துள்ளது. இந்த வார இறுதியில் படம் லாபத்தைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருவதும், மற்ற மொழிகளில் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறாததும் இப்படத்திற்கு நெகட்டிவ்வாக அமைந்துள்ளது.
Related Tags :
Next Story






