’அல்லு அர்ஜுனுக்காக 15 நாட்கள் அதை செய்தேன்’ - பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்

‘டிஜே’ படத்தில் அல்லு அர்ஜுனுடன் நடித்த அனுபவத்தை ஹரிதேஜா நினைவுகூர்ந்தார்.
’அல்லு அர்ஜுனுக்காக 15 நாட்கள் அதை செய்தேன்’ - பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்
Published on

ஐதராபாத்,

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் குறித்து நடிகை ஹரிதேஜா பகிர்ந்துள்ள நினைவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

‘டிஜே (DJ) படத்தில் அல்லு அர்ஜுனுடன் நடித்த அனுபவத்தை சமீபத்திய பேட்டியில் ஹரிதேஜா நினைவுகூர்ந்தார். அவர் பேசுகையில்,

“‘டிஜே' படத்தில் நடிக்கும்போது அல்லு அர்ஜுன் அருகில் ஸ்லிம் ஆகவும், அழகாகவும் தோன்ற வேண்டும் என்பதற்காக 15 நாட்கள் லிக்விட் டயட்டில் இருந்தேன்’ என்றார். மேலும், ‘செட்டில் இருக்கும்போது அல்லு அர்ஜுன் அன்னிடம் வந்து, ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் நடிப்பை பார்த்தேன்; மிகவும் பிடித்தது’ என்று பாராட்டினார். அந்த வார்த்தைகளை என்னால் மறக்கவே முடியாது,” என்று ஹரிதேஜா கூறினார். ‘டிஜே' படத்தில் ஹரிதேஜா அவரது சகோதரியாக நடித்திருந்தார்.

Also Read
கோலியை மிஞ்சிய ராஷ்மிகா - இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை
’அல்லு அர்ஜுனுக்காக 15 நாட்கள் அதை செய்தேன்’ - பிரபல நடிகை அதிர்ச்சி தகவல்

ஒரு முன்னணி நட்சத்திரமாக இருந்தும், சக நடிகைகளின் பணியை நினைவில் வைத்து பாராட்டிய அல்லு அர்ஜுனின் பெருந்தன்மையை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். தற்போது ஹரிதேஜா திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com