10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கும் ஹரிப்பிரியா

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய தமிழ் படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்க ஹரிப்பிரியா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கும் ஹரிப்பிரியா
Published on

பிரபல கன்னட நடிகையான ஹரிப்பிரியா தமிழில் கனகவேல் காக்க படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து வல்லக்கோட்டை படத்தில் நடித்தார். அவரது நடிப்பில் கடைசியாக முரண் படம் வந்தது. இதில் சேரன், பிரசன்னா இணைந்து நடித்து இருந்தனர்.

அதன்பிறகு ஹரிப்பிரியா தமிழ் படங்களில் நடிக்காமல் கன்னட படங்களிலேயே கவனம் செலுத்தினார். தற்போது பெட்ரோமாக்ஸ், அம்ருதமதி, ஹேப்பி எண்டிங், எவரு ஆகிய கன்னட படங்களில் நடித்து முடித்துள்ளார். இவை அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. மேலும் 4 கன்னட படங்கள் கைவசம் உள்ளன. இந்த நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய தமிழ் படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்க ஹரிப்பிரியா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com