ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் வரும் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள திரைப்படம் 'பார்க்கிங்'.
ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் வரும் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
Published on

சென்னை,

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள திரைப்படம் 'பார்க்கிங்'. திரில்லர் டிராமாவான இந்த திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இதையடுத்து 'பார்க்கிங்' திரைப்படம் கடந்த 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் வரும் 30ம் தேதி ஓடிடி தளத்தில் (டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com