''ஹாரி பாட்டர்'' வெப் தொடரின் படப்பிடிப்பு தொடக்கம்...பர்ஸ்ட் லுக் வெளியீடு


Harry Potter Series First Look: Presenting Dominic McLaughlin As A Wizard. Filming Begins
x
தினத்தந்தி 15 July 2025 10:46 AM IST (Updated: 15 July 2025 10:47 AM IST)
t-max-icont-min-icon

8 பாகங்களாக வெளியான 'ஹாரி பாட்டர்' படங்கள் வெப் சீரிஸாக உருவாகிறது.

சென்னை,

ஜே.கே.ரவுலிங் எழுதிய 'ஹாரி பாட்டர்' நாவலை அடிப்படையாக கொண்டு வார்னர் புரோஸ் நிறுவனம் 8 படங்களை தயாரித்து வெளியிட்டது. இந்த படங்களில் டேனியல் ராட்க்ளிப் , ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் மூன்று முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர்.

8 பாகங்களாக வெளியான 'ஹாரி பாட்டர்' படங்கள் இப்போது வெப் சீரிஸாக உருவாகிறது. எச்பிஓ தளம் (HBO) தயாரிக்கும் இந்த சீரிஸிற்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன், ஹாரி பாட்டராக நடிக்கும் டொமினிக் மெக்லக்லினின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகி உள்ளது.

இந்த வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரங்களான ஹாரி பாட்டராக டொமினிக் மெக்லக்லின், ஹெர்மியோன் கிரேஞ்சராக அரபெல்லா ஸ்டாண்டன் மற்றும் ரான் வீஸ்லியாக அலஸ்டர் ஸ்டவுட் ஆகியோர் நடிக்கின்றனர்.

30 ஆயிரம் பேருக்கும் அதிகமானோரை ஆடிஷன் செய்த பிறகு, இந்த 3 பேரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்தத் தொடரை 2027-ம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

1 More update

Next Story