"ஹாரி பாட்டர்" பட நடிகை 6 மாதங்கள் வாகனம் ஓட்ட தடை

‘ஹாரி பாட்டர்’ திரைப்படங்கள் மூலம் உலகளவில் பிரபலமடைந்த நடிகை எம்மா வாட்ஸனுக்கு, 6 மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
"ஹாரி பாட்டர்" பட நடிகை 6 மாதங்கள் வாகனம் ஓட்ட தடை
Published on

பாரிஸ் நகரத்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகையும், விளம்பர அழகியுமானவர் எம்மா வாட்சன். இவர் ஹாரி பாட்டர் திரைப்படங்களில் வரும் ஹெர்மாயினி கிரேஞ்சர் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2001ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை 8 ஹாரி பாட்டர் படங்களில் நடித்துள்ளார். தனது 10 வயது முதல் நடிக்க வந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகி இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படித்து வந்தார்.

நடிகை எம்மா வாட்ஸன், கடந்த 2024ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலுள்ள ஆக்ஸ்போர்ட் நகரத்தில், 48 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில், 60 கி.மீ. வேகத்தில் தனது வாகனத்தை ஓட்டியதாகக் கூறப்படுகிறது. .இதுகுறித்து, சி.சி.டி.வியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளின் மூலம் அவர் மீது குற்றம்சுமத்தப்பட்ட நிலையில், தற்போது 6 மாதங்களுக்கு அவர் வாகனம் ஓட்டுவதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com