ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடித்து வரும் ‘ராமாயணா' படத்தின் காட்சி கசிந்ததா?

இந்த படம் குறித்து எந்த தகவலும் வெளியாகதாவறு, பயங்கர கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடித்து வரும் ‘ராமாயணா' படத்தின் காட்சி கசிந்ததா?
Published on

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணா' படம் இந்தாண்டு நவம்பரில் வெளியாகிறது. ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்து உள்ளனர். ராவணனாக யாஷ் நடிக்கிறார்.

இந்த படம் குறித்து எந்த தகவலும் வெளியாகதாவறு, பயங்கர கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்தநிலையில் ரன்பீர் கபூரும், சாய் பல்லவியும் ராமர், சீதையாக இருக்கும் புகைப்படம் ஒன்று நேற்று வெளியானது. 'ராமாயணா' படத்தில் இருந்து இந்த காட்சி கசிந்துவிட்டதாக பேசப்பட்டது. அதேவேளை இந்த காட்சி படத்தில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல, ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இது பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com