

இந்திய சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் அமிதாப் பச்சன், பாலிவுட்டின் “ஷஹென்ஷா” என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். 1969-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான அவர், "ஷோலே, டான், தீவார், குலி, பா, பிகூ" உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். நடிகர் மட்டுமல்லாமல், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து இந்திய திரையுலகில் தனக்கென அழியாத முத்திரையை பதித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வேகமாக பரவின. இதையடுத்து, அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.
ஆனால், அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவும் செய்திகள் வெறும் வதந்தி என அவரது குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அவர் வழக்கமான மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே மருத்துவமனைக்கு சென்றதாகவும், பரிசோதனை முடிந்த பின்னர் வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, அமிதாப் பச்சன் 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்திலும், இயக்குநர் ரிபு தாஸ்குப்தா இயக்கும் 'செக்சன் 84' படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.