கிடப்பில் போடப்பட்டதா பாலகிருஷ்ணாவின் மகன் அறிமுகமாகும் படம்?


Has Balakrishnas sons debut film been shelved?
x

பிரசாந்த் வர்மா இயக்கும் 'சிம்பா' படத்தின் மூலம் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்சக்னா நடிகராக அறிமுகமாகிறார்.

ஐதராபாத்,

'ஹனுமான்' தெலுங்கு படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடியை வசூலித்தது. இந்தப் படத்தை இயக்கியவர் பிரசாந்த் வர்மா. அவரது அடுத்த படம் 'சிம்பா'. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா மகன் மோக்சக்னா நடிகராக அறிமுகமாகிறார்.

ஹனுமான் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை, லெஜண்ட் புரொடக்சன் மற்றும் எஸ்எல்வி சினிமாஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்களை கடந்தும் வேறு எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.

இதனால், இப்படம் கிடப்பில் போடப்பட்டதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால், அவ்வாறு கிடப்பில் போடப்பட்டதாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை இந்த படம் தொடர்பான நிச்சயமற்ற தன்மை அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த படம் இறுதியாக திரைக்கு வருமா அல்லது மோக்சக்னா வேறு இயக்குனரை தேர்வு செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

1 More update

Next Story