மீண்டும் காதலில் விழுந்தாரா சமந்தா?


மீண்டும் காதலில் விழுந்தாரா சமந்தா?
x
தினத்தந்தி 3 Feb 2025 12:50 PM IST (Updated: 25 March 2025 8:06 PM IST)
t-max-icont-min-icon

இயக்குனர் ராஜுடன் நடிகை சமந்தா கை கோர்த்தபடி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவருக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

இதற்கிடையில், சமந்தா நடிப்பில் சமீபத்தில் 'சிட்டால் ஹனி பன்னி' என்ற வெப் சீரிஸ் வெளியானது. நல்ல வரவேற்பை பெற்ற இந்த வெப் சீரிஸை ராஜ் நிடிமோர் இயக்கியுள்ளார்.

பிக்கில் பால் விளையாட்டில் ஆர்வம் காட்டி வரும் சமந்தா, சென்னை சூப்பர் சாம்ப்ஸ் அணியை வாங்கி அதற்கான புரமோஷனிலும் ஈடுபட்டு வந்தார். இந்த போட்டி கடந்த மாதம் 4-ந் தேதி நேற்றுடன் நிறைவடைந்தது. அந்த போட்டியில் பெங்களூரு சாம்பியன் அணி பட்டம் வென்றது. அந்த போட்டியை காண இயக்குனர் ராஜ் நிடிமோர் வந்துள்ளார். அவர் சமந்தாவுடன் கை கோர்த்தபடி வந்துள்ளார். அதுமட்டுமின்றி போட்டியை இருவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றன. கை கோர்த்தபடி நிற்பதை பார்த்த ரசிகர்களோ இவர்கள் இருவரும் காதலிக்கின்றனர், நடிகை சமந்தா மீண்டும் காதலில் விழுந்துவிட்டார் என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள். சினிமாவில் நடிகர், நடிகைகள் கை கோர்த்தபடி நடந்து செல்வது, கட்டியணைப்பது என்பதெல்லாம் பொதுவான விஷயம் தான். இதையெல்லாம் வைத்து இவர்கள் காதலிப்பதாக கூறுவது எல்லாம் வதந்தியாகவே பார்க்கப்படுகிறது. இந்த காதல் பேச்சு குறித்து ராஜோ, சமந்தாவோ இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story