'ஆலப்புழா ஜிம்கானா' பட அனுபவத்தை பகிர்ந்த நடிகை அனகா ரவி

இப்படத்தில் நடாஷா என்ற கதாபாத்திரத்தில் அனகா ரவி நடித்துள்ளார்.
சென்னை,
'பிரேமலு' படத்தின் மூலம் பிரபலமான நஸ்லென் தற்போது 'ஆலப்புழா ஜிம்கானா' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் லுக்மான் அவரன், கணபதி, சந்தீப் பிரதீப், அனகா ரவி , கோட்டயம் நஸீர் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 10-ந் தேதி வெளியாக இருக்கிறது. மம்முட்டியின் ‛உண்ட' மற்றும் டொவினோ தாமஸின் ‛தள்ளுமால' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் காலித் ரஹ்மான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இதில் நடிகை அனகா ரவி, நடாஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் இப்படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை நடிகை அனகா ரவி பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,
"அடி வாங்கத் தயாரா என்று இயக்குனர் ரஹ்மான் சார் இரண்டு, மூன்று முறை என்னிடம் கேட்டார். ஏனென்றால், எனது கதாபாத்திரம் குத்துச்சண்டையை மையமாக கொண்டது என்பதால் அதனை மனதளவிலும், உடல் ரீதியாக சுமக்க வேண்டும். நிச்சயமாக, அதற்கு நிறைய பயிற்சி தேவைப்பட்டது' என்றார்.
அனகா ரவி, மம்முட்டி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'காதல்: தி கோர்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதில் மம்முட்டியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.






