“என்னால் முடியும் என நம்பினார்” - கிரிஷ் ஏ.டி.க்கு மமிதா பைஜு நன்றி!

மலையாள நடிகை மமிதா பைஜு, தனக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கி நம்பிக்கை வைத்த இயக்குநர் கிரிஷ் ஏ.டி.க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
“என்னால் முடியும் என நம்பினார்” - கிரிஷ் ஏ.டி.க்கு மமிதா பைஜு நன்றி!
Published on: 

நிவின் பாலி, மமிதா பைஜு நடிப்பில் வெளியான ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மமிதா பைஜு இதனைத் தெரிவித்தார்.

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான மமிதா பைஜு, ‘பிரேமலு’, ‘சூப்பர் சரண்யா’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படமும் அவருக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நம்பிக்கை வைத்த இயக்குநர்

இந்த நிலையில், ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தில் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய மமிதா பைஜு,‘சூப்பர் சரண்யா’ படப்பிடிப்பு முடிவடைந்திருந்த நிலையில், அந்தப் படம் வெளியாகும் முன்பே இயக்குநர் கிரிஷ் ஏ.டி. தன்னிடம் ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தின் கதையைக் கூறியதாக தெரிவித்துள்ளார். அப்போது, அந்தக் கதாபாத்திரத்தில் தன்னால் நடிக்க முடியும் என்று இயக்குநர் நம்பிக்கை தெரிவித்ததாகவும், அந்த நம்பிக்கைக்கான காரணம் தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ‘பிரேமலு’, ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடிக்க முடியும் என்று தானே நம்பாத நேரத்தில்கூட கிரிஷ் ஏ.டி. தன் மீது நம்பிக்கை வைத்ததாகக் கூறிய மமிதா பைஜு, அவருக்கு நன்றி தெரிவித்தார்.

படக்குழுவினருக்கும் நன்றி

மேலும், கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கிரிஷ் ஏ.டி. இயக்கிய ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், ஓ.டி.டி. வெளியீட்டுக்குப் பிறகும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com