''ஏமாற்றி தாலி கட்டினார்'' - சின்னத்திரை நடிகை கண்ணீர் மல்க புகார்

நீதிமன்றத்தை நாடி தீர்வு காண போவதாக சின்னத்திரை நடிகை ரெகானா பேகம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
சென்னை,
ராஜ்கண்ணன் தன்னை ஏமாற்றி தாலி கட்டியதாகவும், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடி தீர்வு காண போவதாகவும் சின்னத்திரை நடிகை ரெகானா பேகம் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
ரெகானா பேகம் புகார் தொடர்பாக பூந்தமல்லி போலீசார் இருதரப்பினரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். இருவரும் வழக்கறிஞர்களுடன் ஆஜரான நிலையில் போலீசார் தனித்தனியாக விசாரித்தனர்.
இருவரும் பணம் கொடுத்தது மற்றும் வாங்கியது உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை போலீசார் சரிபார்த்துள்ளனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் தீர்வு கண்டு கொள்வதாக கூறியதன் பேரில், இரு தரப்பினரிடம் எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
பொன்னி தொடரில் நாயகனின் அம்மாவாகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்தி பாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரிஹானா பேகம். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
சென்னை போரூர் அடுத்த கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் கண்ணன். ஓட்டல் அதிபரான இவர், நடிகை ரெகானா பேகம் தன்னிடம் நகை, பணத்தை வாங்கி மோசடி செய்ததாக புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






