வாழ்க்கையை நரகமாக்கி விட்டார்... சுகேஷ் சந்திரசேகர் மீது நடிகை ஜாக்குலின் புகார்

சுகேஷ் சந்திரசேகர் எனது உணர்ச்சிகளோடு விளையாடி வாழ்க்கையை நரகமாக்கி விட்டார் என நடிகை ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையை நரகமாக்கி விட்டார்... சுகேஷ் சந்திரசேகர் மீது நடிகை ஜாக்குலின் புகார்
Published on

பெங்களூரு தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் கைதாகி ஜெயிலில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் வழங்கியது விசாரணையில் தெரிய வந்ததால் ஜாக்குலின் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கோர்ட்டில் ஜாக்குலின் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் போலீசில் ஜாக்குலின் அளித்த வாக்குமூலத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். வாக்குமூலத்தில் ஜாக்குலின் கூறும்போது, ''சுகேஷ் சந்திரசேகர் எனது உணர்ச்சிகளோடு விளையாடி வாழ்க்கையை நரகமாக்கி விட்டார். அவரை உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரி என்று சொல்லி என்னை நம்ப வைத்தனர். தமிழக முன்னாள் முதல்-அமைச்சரின் உறவினர் என்று தெரிவித்தார்.

பல படங்களை தயாரிக்க இருப்பதாகவும் அவற்றில் நான் நடிக்க வேண்டும் என்றும் கூறினார். தினமும் மூன்று முறை போன் மற்றும் வீடியோ காலில் பேசிக் கொள்வோம். அவர் சிறையில் இருந்து பேசுவதாக என்னிடம் ஒருமுறை கூட தெரிவிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருப்பதையும் என்னை அவர் ஏமாற்றியதையும் தெரிந்து கொண்டேன். சுகேஷ் என்னை முட்டாள் ஆக்கி விட்டார். சென்னை சென்று இரண்டு முறை அவரை சந்தித்தேன். 2021 ஆகஸ்டு 8-ந்தேதி கடைசியாக அவரிடம் பேசினேன்.'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com