'இந்தி பட உலகை நாசம் செய்கிறார்' - ஷாருக்கான் மீது பிரபல டைரக்டர் புகார்

'தி காஷ்மீர் பைல்ஸ்' இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, நடிகர் ஷாருக்கான் பற்றி விமர்சித்து பேசியுள்ளார்
'இந்தி பட உலகை நாசம் செய்கிறார்' - ஷாருக்கான் மீது பிரபல டைரக்டர் புகார்
Published on

'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தின் மூலம் பாலிவுட்டின் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர், விவேக் அக்னிஹோத்ரி. இந்த படத்துக்காக அவர் பல்வேறு விருதுகளை குவித்தார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி, நடிகர் ஷாருக்கான் பற்றி விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது:-

''எனக்கு ஷாருக்கானை மிகவும் பிடிக்கும். அவரை போல ஈர்ப்பும், ஸ்டைலும் வேறு யாருக்கும் இல்லை என்பதும் உண்மை தான். அதற்காக பாலிவுட்டில் அவர் செய்யும் அரசியலை ஏற்கமுடியாது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. பாலிவுட்டை நாசம் செய்வதற்கு அவர் மாதிரியான ஆட்கள், இயக்குனர் கரன் ஜோஹர் மாதிரியான ஆட்கள் தான் காரணமாகிறார்கள்.

படத்தை பற்றி மிகையான விளம்பரம், படத்தின் ஸ்டார் வேல்யூ இது மட்டும் தான் இப்போது பாலிவுட்டை ஆட்டுவிக்கிறது. நட்சத்திர மதிப்பு எதற்கும் மதிப்பில்லாமல் போய்விட்டது. மக்களை ஊமைகள் என அவர்கள் நினைக்கிறார்கள். படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை தான் பார்க்கிறார்கள். அவர்கள் படம் ஜெயித்தால் ஷாருக்கான் படம் ஜெயிக்கிறது என்கிறார்கள். என் படம் ஜெயித்தால் மக்கள் படம் ஜெயிக்கிறது என்கிறார்கள். சில நேரங்களில் கடவுள், சாத்தான் போலத்தான் இது தோன்றுகிறது'', என தனது ஆதங்கத்தை தெரிவிக்கிறார்.

விவேக் அக்னிஹோத்ரியின் இந்த கருத்து பாலிவுட்டில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com