அட்லீ - அல்லு அர்ஜுன் படத்திற்கு இசையமைப்பது அவர்தான் - அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

இந்தப் படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார்.
சென்னை,
''புஷ்பா 2 தி ரூல்'' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் இயக்குனர் அட்லீயுடன் இணைந்திருக்கிறார்.
('AA22xA6') என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில், தற்போது குழு அபுதாபிக்குச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையில், பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டியூட் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ,
சாய் அபயங்கர் , அட்லீ - அல்லு அர்ஜுனின் AA22xA6 படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும், இவ்வளவு பெரிய படத்தைப் பெற அவர் எவ்வளவு திறமையானவராக இருப்பார் எனவும் கூறினார்.
இதன் மூலம் அல்லு அர்ஜுன் -அட்லீ படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






