குல்ஷன் தேவையாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தபோது...பகிர்ந்த நடிகை கிரிஜா ​​

குல்ஷன் தேவையா சமீபத்தில் காந்தாரா சாப்டர் 1 படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
‘He must have asked me at least 16 or 17 times…’: Girija Oak recalls filming intimate scene with Gulshan Devaiah
Published on

சென்னை,

'தெரபி ஷெரபி' என்ற வெப் தொடரில் நடிகர் குல்ஷன் தேவையாவுடன் ஒரு நெருக்கமான காட்சியில் நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகை கிரிஜா ஓக் மனம் திறந்து பேசியுள்ளார். படப்பிடிப்பின் போது தன்னை முழுமையாக சவுகரிமாக உணர வைத்ததாக குல்ஷனை அவர் பாராட்டினார்.

அவர் பேசுகையில், ' காட்சிக்கு முன்பு நீங்கள் எவ்வளவு திட்டமிட்டாலும், ஒரு மில்லிகிராம் அளவு கூட அசவுகரியத்தை உணர வைக்காதவர்கள் மிகக் குறைவுதான். குல்ஷன் அவர்களில் ஒருவர். படப்பிடிப்பின்போது 16 அல்லது 17 முறையாவது, நீங்கள் ஓகே வா..ஓகே வா என்று கேட்டிருப்பார். அந்த அக்கறை மற்றும் மரியாதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றார்.

கன்னட நடிகர் குல்ஷன் தேவையா சமீபத்தில் காந்தாரா சாப்டர் 1 படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது 'தெரபி ஷெரபி' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com