‘100 தடவையாவது என்னை திருமணம் செய்துகொள்ள கெஞ்சியிருப்பார்!’ - விஜய் தேவரகொண்டா பேச்சால் சர்ச்சை

விஜய் தேவரகொண்டாவின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘100 தடவையாவது என்னை திருமணம் செய்துகொள்ள கெஞ்சியிருப்பார்!’ - விஜய் தேவரகொண்டா பேச்சால் சர்ச்சை
Published on: 

ஐதராபாத்,

ராஷ்மிகா சுமார் 100 தடவையாவது கெஞ்சியிருப்பார். அவருடைய வற்புறுத்தலின் பேரில்தான் இந்தத் திருமணம் நடந்தது. இல்லையென்றால், இன்னும் தாமதமாகியிருக்கும்” என்று விஜய் தேவரகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். தங்களது காதலை நீண்டகாலமாக ரகசியமாக வைத்திருந்த இருவரும், கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி உதய்ப்பூரில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இணைந்து நடித்த ‘ரணபலி’

திருமணத்துக்குப் பிறகும் திரையுலகில் கவனம் செலுத்தி வரும் இந்தத் தம்பதி, இணைந்து நடித்த ‘ரணபலி’ திரைப்படமும் சமீபத்தில் வெளியானது. இவர்களது கூட்டணியில் வெளியான 3வது படம் இதுவாகும். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இதற்கிடையில், இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர்.

விஜய் தேவரகொண்டா பேச்சு

அப்போது காதல் மற்றும் திருமணம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த விஜய் தேவரகொண்டா, “என்னைத் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று ராஷ்மிகா சுமார் 100 தடவையாவது கெஞ்சியிருப்பார். அவருடைய வற்புறுத்தலின் பேரில்தான் இந்தத் திருமணம் நடந்தது. இல்லையென்றால், இன்னும் தாமதமாகியிருக்கும்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

சமூக வலைதளங்களில் எதிர்ப்பு

விஜய் தேவரகொண்டாவின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்து ராஷ்மிகாவை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கருதும் ரசிகர்கள் சிலர் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதே நேரத்தில், இந்தப் பேச்சு நகைச்சுவையாகக் கூறப்பட்டதா அல்லது வேறு பொருளில் எடுத்துக்கொள்ளப்பட்டதா என்பது குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com