குளியல் அறையில் தவறி விழுந்தார்... பட அதிபர் ராஜ்கண்ணுவுக்கு கை, கால் முறிவு

குளியல் அறையில் தவறி விழுந்தார்... பட அதிபர் ராஜ்கண்ணுவுக்கு கை, கால் முறிவு
Published on

பழம்பெரும் சினிமா தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த 16 வயதினிலே படத்தை தயாரித்தவர். இந்த படத்தின் மூலம்தான் பாரதிராஜா டைரக்டராக அறிமுகமானார்.

பாக்யராஜ், ராஜேஷ் நடித்த கன்னி பருவத்திலே, சுதாகர், ராதிகா நடித்த கிழக்கே போகும் ரெயில், பாண்டியன், ரேவதி நடித்த பொண்ணு புடிச்சிருக்கு உள்பட பல படங்களை தயாரித்துள்ளார். கடைசியாக கமல்ஹாசன் நடித்த மகாநதி படத்தை தயாரித்தார்.

எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு தற்போது 77 வயது ஆகிறது. சென்னை தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் வீட்டின் குளியல் அறையில் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தவறி விழுந்தார். இதில் அவரது கை, காலில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன.

இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ செலவுக்கு தேவையான பணம் இன்றி குடும்பத்தினர் சிரமப்படுகிறார்கள்.

இதுகுறித்து எஸ்.ஏ.ராஜ்கண்ணு மகள் பாமா கூறும்போது, "அப்பாவுக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது. அப்பா அறிமுகப்படுத்திய நடிகர் ராஜேஷ், நடிகை ராதிகா ஆகியோர் உதவி செய்தனர். கார்த்தி ஆஸ்பத்திரி பில் கட்ட உதவினார்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com