'எனது நிர்வாண வீடியோவை ரூ.47 லட்சத்துக்கு விற்றார்'- முன்னாள் கணவர் மீது கவர்ச்சி நடிகை புகார்

இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் ஆதில்கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
'எனது நிர்வாண வீடியோவை ரூ.47 லட்சத்துக்கு விற்றார்'- முன்னாள் கணவர் மீது கவர்ச்சி நடிகை புகார்
Published on

பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில் 'என் சகியே', 'முத்திரை', 'கம்பீரம்' ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். ஆதில்கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணமான ஒரு மாதத்திலேயே ஆதில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்தார். இதில் ஆதில் கைதாகி தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.

ஆதில் கூறும்போது, ''ராக்கி சாவந்தை நான் அடிக்கவில்லை. அவர்தான் என்னை அடித்தார். என்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டுகிறார்'' என்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராக்கி சாவந்த் அளித்துள்ள பேட்டியில், ''ஆதில் எனது நிர்வாண வீடியோக்களை ரூ.47 லட்சத்திற்கு விற்பனை செய்து உள்ளார். நான் குளியலறையில் இருந்தபோது வீடியோ எடுத்து உள்ளார். என் முழு நிர்வாண கோலத்தையும் வீடியோவாக எடுத்து இருக்கிறார்.

என்னை வீட்டில் வைத்து பலமுறை பலாத்காரம் செய்தார். என் முகத்தை எப்படி உலகுக்குக் காட்ட முடியும்?. உலகம் முழுவதும் என்னை நிர்வாணமாக பார்த்தால் நான் எங்கே செல்ல முடியும்? விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா?" என்று கூறியுள்ளார். இது பரபரப்பாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com