'சிறு வயதில் அவர் என்னுடைய கிரஷ்'- பிரியங்கா மோகன்
சினிமா துறைக்கு வர வேண்டும் என்று ஒரு நாள் கூட யோசித்தது இல்லை என்று நடிகை பிரியங்கா மோகன் கூறினார்.
சென்னை,
தெலுங்கில் அறிமுகமாகி தமிழ் மொழியில் இன்று கொடி கட்டி பறப்பவர் நடிகை பிரியங்கா மோகன். தெலுங்கில் கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம் அவர் பிரபலமானார். நானியுடன் சேர்ந்து அவர் நடித்த அத்திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அவர் தமிழுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
சமீபத்தில், தனுசின் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்திருந்தார். அதிக ரசிகர்களை சேர்த்து வைத்துள்ள பிரியங்கா மோகன் தனது வாழ்க்கை மற்றும் சினிமா அனுபவங்களை பகிர்ந்தார். அவரது பேட்டியில்,
நான் படித்து என்ஜினீயரிங். படிப்பை முடித்ததும் நிரந்தரமான நல்ல வேலையில் சேர வேண்டும் என்பதுதான் எனது கனவாக இருந்தது. சினிமா துறைக்கு வர வேண்டும் என்று ஒரு நாள் கூட யோசித்தது இல்லை. அதற்கான முயற்சியிலும் ஈடுபடவில்லை. சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் ஏதோ ஒரு கம்பெனியில் பணியாற்றிக்கொண்டு இருந்திருப்பேன்.
எனக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த். அவரது நடிப்பு மட்டுமல்ல அவரிடம் இருக்கும் சிம்ப்ளிசிட்டி மிகவும் பிடிக்கும். என்றாவது ஒரு நாள் ரஜினியை சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். பிராட் பிட்டை எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதில் அவர் என்னுடைய கிரஷ். இவ்வாறு கூறினார்.