உடல்நல குறைவு: நடிகை சமந்தாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை

சமந்தாவுக்கு தற்போது உள்ளூர் ஆயுர்வேத டாக்டர்களால் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதில் நல்ல பலன் கிடைத்து இருப்பதாகவும் நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
உடல்நல குறைவு: நடிகை சமந்தாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை
Published on

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் (தசை அழற்சி) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் குணமாக நினைத்ததை விட அதிக நாட்கள் ஆகும்போல் தெரிகிறது என்றும், நோய் பாதிப்புடன் போராடி வருகிறேன் என்றும் உருக்கமான பதிவை சமந்தா வெளியிட்டு இருந்தார். ஸ்டூடியோவில் டப்பிங் பேசும்போதும் தனக்கு குளுக்கோஸ் செலுத்தப்படும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். அதை பார்த்த பலரும் சமந்தா விரைவில் குணம் அடைய வலைத்தளத்தில் வாழ்த்தினர். வீட்டில் ஓய்வு எடுத்து வரும் சமந்தாவுக்கு தற்போது உள்ளூர் ஆயுர்வேத டாக்டர்களால் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதில் நல்ல பலன் கிடைத்து இருப்பதாகவும் நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். ஆயுர்வேத சிகிச்சையால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com