

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் 'காக்டெயில் 2' படம் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதற்கிடையில் நடிகைகளுக்கு அடிப்படையே ஆரோக்கியம்தான் என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, "அழகு, திறமையை காட்டிலும் ஆரோக்கியம்தான் நடிகைகளின் அடிப்படை விஷயமாகும்.
இங்கு நடிகர்களை போல நடிகைகளும் நீண்ட காலம் சினிமாவில் நிலைத்திருக்க ஆரோக்கியம்தான் அவசியமாகும். முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு இதனை நமக்கு தரும். எனவே சோம்பேறித்தனம் பார்க்காமல் பெண்கள் அனைவருமே உடற்பயிற்சி செய்யுங்கள். கிடைக்கும் நேரத்தில் யோகா உள்ளிட்ட பயிற்சிகளிலும் ஈடுபடுங்கள்” என்றார்.