உடல்நிலை வதந்தி: நடிகை சாரதா விளக்கம்

தமிழ், தெலுங்கு திரையுலகில் 1960 முதல் 1990 வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சாரதா. இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசனுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
உடல்நிலை வதந்தி: நடிகை சாரதா விளக்கம்
Published on

குங்குமம், வாழ்க்கை, ஞான ஒளி, துலாபாரம், என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன் போன்றவை சாரதா நடிப்பில் வந்த முக்கிய படங்கள். மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிகாந்தின் அம்மாவாக நடித்தார்.

சாரதாவுக்கு தற்போது 76 வயது ஆகிறது. இந்த நிலையில் சாரதா உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் திடீர் வதந்தி பரவியது. இதனால் அதிர்ச்சியான பலரும் சாரதாவின் மொபைல் நம்பருக்கு போன் செய்து விசாரிக்க ஆரம்பித்தனர். இதற்கு சாரதா விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறும்போது, நான் உயிருடன் நலமாக இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை. எனவே வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். வதந்தி பரப்ப இதுபோன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபட வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com