''அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்'' - விஷால்

தனது பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அனைவருக்கும் நடிகர் விஷால் நன்றி கூறி இருக்கிறார்.
''Heartfelt thanks to everyone'' - Vishal's statement
Published on

சென்னை,

தனது பிறந்தநாளுக்கும் , நிச்சயதார்த்தத்திற்கும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இதயம் கனிந்த நன்றிகள் . நேற்று எனது பிறந்த நாளில் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் என் அன்பு தம்பி, தங்கைகள் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பல்வேறு நற்பணி, நல திட்ட உதவிகள் சமூக நலச் சேவைகளில் ஈடுபட்டதற்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய அன்பு சகோதரர் நடிகர் யோகிபாபு மற்றும் குடுபத்தினர்கள், பட்டினத்தார் கோவிலில் அன்னதானம் வழங்கிய சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்புராயன், திலீப் சுப்புராயன் அவர்களுக்கும், மேலும் தமிழ் நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மும்பை மாநிலங்களில் உள்ள அன்பு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் மக்களுக்கு பயன்பெறும் வகையில் நற்பணி நலத்திட்ட உதவிகளை வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

அதேநேரத்தில், நேற்று நடைபெற்ற எனது திருமண நிச்சயதார்த்தத்தை முன்னிட்டு எனக்கும் சாய் தன்ஷிகா - விற்கும் வாழ்த்துகளை சமூக வலைதளங்கள், தொலைபேசி, நேரடியாக என பல வழிகளில் தெரிவித்த திரையுலக நண்பர்கள், அரசியல் தலைவர்கள், ஊடக, பத்திரிகை நண்பர்கள், அன்பிற்கினிய ரசிகர்கள் மற்றும் அன்பு பொதுமக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

எனது பிறந்தநாளும், வாழ்வின் புதிய அத்தியாயமும் ஒரே நாளில் இணைந்து மகிழ்ச்சியளித்த இந்நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியமைத்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com