“ஹார்ட்டின்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு

தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா ‘ஹார்ட்டின்’ படம் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
“ஹார்ட்டின்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியீடு
Published on

‘பிரேமம்’ படம் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன். காதலும் கடந்து போகும், கவண், ப பாண்டி, ஜூங்கா, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக அவர் நடித்தது அவரை இன்னும் பிரபலமாகியது. இவர் நடித்த 'ஜாலியோ ஜிம்கானா' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘ஹார்டின்’. கிஷோர் குறும் படங்கள், வெப் தொடர்கள் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் நாயகனாக சனந்த் நடிக்கிறார். இவர் ‘பேட்ட’ படத்தில் நடித்துள்ளார்.நாயகிகளாக மடோனா செபாஸ்டியன் மற்றும் இமயா ஆகியோர் நடிக்கின்றனர். இதில் இமயா தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள். இவர் இப்படம் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

ஹார்ட்டின் திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், “ரோம்-காம் என்று சொல்லப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதை இது. அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கி வருகிறோம். சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா திரைக்கதை நுட்பங்களைப் பாடமாக எடுத்து நியூயார்க்கில் படித்துவிட்டு வந்திருக்கிறார். அதனால் இதன் திரைக்கதையில் அவருடைய பங்களிப்பும் இருக்கிறது. இந்த படம் இரண்டு பெண்களின் பார்வையில் சொல்லப்படும் கதையை கொண்டது” என்கிறார் இயக்குனர்.

‘ஹார்ட்டின்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com