ஆக்சனில் களம் இறங்கும் ஹெபா பட்டேல் - ‘மிராக்கிள்’ படத்துக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

இந்த படத்தில் ரந்தீர் பீசு கதாநாயகனாக நடிக்கிறார்.
ஆக்சனில் களம் இறங்கும் ஹெபா பட்டேல் - ‘மிராக்கிள்’ படத்துக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
Published on

சென்னை,

முழுக்க முழுக்க ஆக்சன் அம்சங்களுடன் உருவாகி வரும் ‘மிராக்கிள்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சாய்தா பேமிலி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ரமேஷ் எக்கிடி, ஸ்ரீகாந்த் மோகடாசு மற்றும் சந்தர் கவுட் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

‘சத்ய காங்க்’, ‘பைட்டர் சிவா’ போன்ற படங்களை இயக்கிய பிரபாஸ் நிம்மலா இந்த படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக நடிகை ஹெபா பட்டேல் நடிக்கிறார். ஏற்கனவே இரண்டு கட்டப்படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாவது கட்ட படப்பிடிப்பு வரும் 24-ம் தேதி ஐதராபாத் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடங்குகிறது. அதில் ஹெப்பா பட்டேல் படக்குழுவுடன் இணைய உள்ளார்.

Also Read
இன்று தியேட்டரில் வெளியான திரைப்படங்கள் பட்டியல் இதோ! (20.02.2026)
ஆக்சனில் களம் இறங்கும் ஹெபா பட்டேல் - ‘மிராக்கிள்’ படத்துக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

இந்த படத்தில் ரந்தீர் பீசு நாயகனாக நடிக்கிறார். மேலும் மூத்த நடிகர்கள் ஸ்ரீராம் மற்றும் சுரேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். ‘மிராக்கிள்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com