

சென்னை,
'ஹலோ' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் இப்போது அடையாளமே தெரியாமல் மாறி இருக்கிறார்.
பிரபல இயக்குநர் விக்ரம் கே. குமார் இயக்கத்தில், அகில் அக்கினேனி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஹலோ'. இத்திரைப்படத்தில், கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷனின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்திருந்திருந்தவர் மைரா தண்டேகர். அதில் அவர் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த மைரா தண்டேகர், 'ஹலோ' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டிலும் குழந்தை நட்சத்திரமாக பல பெரிய படங்களில் நடித்தார். ராணி முகர்ஜி நடித்த 'ஹிச்கி', ஜான் ஆபிரகாம் நடித்த 'சத்யமேவ ஜெயதே', அஜய் தேவ்கன் நடித்த 'தானாஜி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.
'ஹலோ' திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது மைரா டீன் ஏஜ் பருவத்தை எட்டியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், தற்போது தனது புதிய தோற்றத்தால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
சமூக வலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் மைரா தண்டேகர், அடிக்கடி பகிரும் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் மற்றும் நடன ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "ஹலோ படத்தின் குட்டி கல்யாணியா இது?" என்று ஆச்சரியத்துடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.