தர்மேந்திராவின் “பத்ம விபூஷண்” விருதை பெற்றுக்கொண்ட ஹேம மாலினி

இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா தனது 89-வது வயதில் கடந்த ஆண்டு நவம்பர் 24-ந் தேதி மரணம் அடைந்தார்.
தர்மேந்திராவின் “பத்ம விபூஷண்” விருதை பெற்றுக்கொண்ட ஹேம மாலினி
Published on

இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை கடந்த ஜனவரி 26ம் தேதி வெளியிட்டது. நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றன. கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், கல்வி, பொது சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும், பொதுவாழ்க்கையில் நீண்டகாலம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

மறைந்த நடிகர் தர்மேந்திர சிங் தியோலுக்கு பத்ம விபூஷண் விருதும், நடிகர் மாதவனுக்கு பத்ம ஸ்ரீ விருதும், நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டது. இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா தனது 89-வது வயதில் கடந்த ஆண்டு நவம்பர் 24-ந் தேதி மரணம் அடைந்தார்.

பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை நடிகையும் அவரின் மனைவியுமான ஹேம மாலினி குடியரசுத் தலைவரிடம் இன்று (மே 25) பெற்றுக்கொண்டார்.

2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் பத்க விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று விருதுகளை வழங்கினார்.

இதன்படி கலைத் துறையில் 300 படங்களுக்கும் மேல் நடித்து பாலிவுட் திரை உலகிற்கு தன்னிகரற்ற சேவையாற்றியதற்காக மறைந்த நடிகர் தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை குடியரசுத் தலைவரிடம் அவரின் மனைவி ஹேம மாலினி பெற்றுக்கொண்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com