இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் சிறப்பானது - மஞ்சு வாரியர் குறித்து பேசிய வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை 2' படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் சிறப்பானது - மஞ்சு வாரியர் குறித்து பேசிய வெற்றிமாறன்
Published on

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது.

விடுதலை 2 படத்தில்  சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20-ந் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில் நேற்று சென்னையில் இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, சூரி, விஜய்சேதுபதி, வெற்றி மாறன் ஆகியோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றி மாறன் நடிகை மஞ்சுவாரியர் குறித்து பேசியுள்ளார்.

அதில், "மஞ்சுவாரியர் விழாவிற்கு வரவில்லை என்பதால் அவரைப் பற்றி யாருமே பேசவில்லை. நான் அவரை இந்த படத்தில் மூன்று காட்சிகள் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று அழைத்தேன். ஆனால் அவர் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்போது அவருக்கு இந்த படத்தில் இரண்டு பாடல் இருக்கிறது. அசுரன் படத்திற்கு பிறகு அவருடன் பணியாற்றியுள்ளேன். இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் சிறப்பானது" என்று கூறியுள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com