''கூலி'' - அமீர்கானின் சிறப்பு தோற்றம் குறித்து வெளியான தகவல்


Here is the latest buzz about Aamir Khan’s cameo in Coolie
x

''கூலி'' படத்தில் கேமியோ வேடத்தில் அமீர்கான் நடித்துள்ளார் என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரியும்.

சென்னை,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ''கூலி'' படத்தின் முதல் பாடலான ''சிக்கிடு'' சமீபத்தில் வெளியானது. அனிருத் இசையமைத்த இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வருகிறது. இதில், 15 நிமிட கேமியோ வேடத்தில் அமீர்கான் நடித்துள்ளார் என்பது ஏற்கனவே அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில், சமீபத்திய தகவலின்படி, அந்த 15 நிமிடங்கள் அமீர்கான் மற்றும் ரஜினிகாந்த் இடையேயான அதிரடி காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக அமீர்கான் சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியதாக தெரிகிறது.

1 More update

Next Story